முதலிரவை சந்திக்கும் தம்பதியருக்கு!
திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன. இதனாலே யே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்…. முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை.
கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும்.
அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம். முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள்.
அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
உறவை பலப்படுத்தும். எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.
இளம் பெண்ணை ஆண்களுக்கு இன்பத்திற்காக (V.day)
"வேலன்டைன்ஸ் டே" என்ற காதலர் தினத்தை (பிப்ரவரி'14) ஐரோப்பிய நாடுகளில் செத்துவிட்ட இந்தத் தினம், அமெரிக்கா, பிரிட்டனில் மட்டுமே தற்பொழுது உயிரோடிருக்கும் இந்தத் தினம், திடீரென்று இப்பொழுது முஸ்லிம் நாடுகளில் முளைத்திருக்கிறது. யார் இந்த வேலன்டைன்? ஏன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது?
காதலர் தினத்திற்கென்று கதைகள் ஏராளம் உண்டு.
நான்காவது நூற்றாண்டில் ரோமர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மதச் சடங்குதான் இந்த வேலன்டைன் கொண்டாட்டம். ஆட்டு மந்தைகள் மற்றும் பொருள் வளத்திற்கான கடவுளான லூப்பர்கஸ் என்ற கடவுளை கௌரவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இது.
இந்தத் தினக் கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய விஷயம் உண்டு. இந்தத் தினத்தில் ஒரு குலுக்கல் நடைபெறும். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அல்ல இது. இளம் பெண்ணை ஆண்களுக்கு இன்பத்திற்காகவும், பொழுது போக்கிற்காகவும் தாரை வார்த்துத் தர நடக்கும் குலுக்கல் இது. எந்த இளம் பெண் எந்த ஆணுக்கு என்பதைக் குலுக்கலில் எடுக்கப்படும் துண்டுச் சீட்டு தீர்மானிக்கும்.
அடுத்த வருடம் இதே தினத்தில் புதிய குலுக்கல் நடைபெறும் வரை இந்த இளம் பெண்கள் அவரவருக்குரிய ஆண்களுடனேயே காலம் தள்ள வேண்டும். அந்த ஆண்களுக்கு இவர்கள் இன்பம் தந்து கொண்டிருக்க வேண்டும். இந்தத் தினத்தில் இன்னொரு இழிவான காரியமும் அரங்கேற்றப்படும். இரண்டு இளம் ஆண்கள் ஓர் இளம் பெண்ணை தோல் வாரினால் அடிப்பார்கள். இந்த ஈன இரக்கமற்ற செயலைச் செய்யும் அந்த இரண்டு ஆண்களும் ஒரு சிறிய ஆட்டுத் தோலைத்தான் ஆடையாக உடுத்தியிருப்பர். அந்தச் சிறிய ஆடையும் பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் மற்றும் நாய்களின் ரத்தங்களைக் கொண்டு கறை படுத்தப்பட்டிருக்கும்.
இந்தச் சாட்டையடியை 'புனிதமானதாக' அவர்கள் கருதினார்கள். அந்த இளம் ஆண்கள் 'புனிதப் புருஷர்களாக' மதிக்கப்பட்டார்கள். இப்படி சாட்டையடித்தால் அந்தப் பெண்கள் நல்ல முறையில் தங்கள் குழந்தைகளை வளர்ப்பார்களாம். இப்படியொரு நம்பிக்கை. இதற்கொரு கொண்டாட்டம்.
இந்த மடத்தனமான லூப்பர்காலியா என்றழைக்கப்படும் கொண்டாட்டத்தை நிறுத்துவதற்காக கிறிஸ்தவ மதம் கடும் முயற்சி எடுத்தது. வழக்கம் போல் தோல்வி கண்டது. ஆதலால் குறைந்தபட்ச நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தது. குலுக்கல் சீட்டுகளில் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக புனித துறவிகளின் பெயர்களை வைத்தது.
இப்பொழுது குலுக்கலில் எந்த ஆண் எந்தத் துறவியின் சீட்டை எடுக்கிறானோ அவன் அடுத்த ஆண்டு இந்தத் தினம் வரை அந்தத் துறவியைப் பின்பற்றி, அவரை மாதிரியே வாழ வேண்டும். இந்தச் சிறு மாற்றத்தைக் கிறிஸ்தவ மதம் கொண்டு வந்தது.
இது சிறிது காலத்தில் "துறவி வேலன்டைன்" தினம் என்று மாற்றப்பட்டது.
கி.பி.496-ல் போப் கிளாசியஸ் என்பவரால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. துறவி வேலன்டைன் என்பவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக இந்த மாற்றத்தை அவர் கொண்டு வந்தார்.
இருப்பினும் கிறிஸ்தவக் கதைகளில் விதவிதமாக 50 வேலன்டைன்கள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு வேலன்டைன்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை, பண்புகள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன. ஒர கதைப்படி, துறவி வேலன்டைன் என்பவர் ஒரு 'காதல் துறவி'யாக இருந்துள்ளார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் சிறைக்காவலரின் மகளை அவர் காதலித்தாராம்.
இந்தக் காதலர் தினத்தில் நடைபெறும் குலுக்கல்களால் குழப்பங்களும், தகராறுகளும் தலைதூக்க ஆரம்பித்தன. இந்தக் குழப்பங்களையும் தகராறுகளையும் சமாளிக்க முடியாத பிரெஞ்சு அரசு, கி.பி.1776-ல் இந்தச் சடங்கைத் தடை செய்தது. அந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது ஒழிந்தது.
இங்கிலாந்தில் 'புரித்தான்கள்' என்ற இனத்தார் பலமாக இருந்தபொழுது இது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 1660ல் மன்னர் இரண்டாம் சார்லஸ் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார். இங்கிலாந்திலிருந்து இந்தச் சடங்கு புதிய உலகிற்கு அறிமுகமாகியது. வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் பண்ண திட்டம் போட்டனர்.
கி.பி.1840-ல் எஸ்தர் ஏ.ஹவ்லண்ட் என்பவர் முதன்முதலாக அமெரிக்க காதலர்தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது.
இம்பாக்ட் இண்டர்நேஷனல், லண்டன்.
முதல் பிரசவத்தில் 6 கண்மணிகள்
12 வருட காத்திருப்பிற்கு இறைவன் சுரய்யா ஃபவ்லிக்கு 6 குழந்தைகளை அளித்துள்ளான். இதனால் மகிழ்ச்சியடைந்த எகிப்திய தம்பதியினர் செலவுகளை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அபுதாபியில் 2000 திர்ஹம் சம்பளத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் சுரய்யாவின் கணவர் ஸாயித் முஹம்மது. குழந்தைகள் இல்லாததன் காரணத்தினால் பல ஆண்டுகளாக சிகிட்சைப் பெற்றுவந்தனர் இருவரும்.
சிகிட்சைக்கான செலவு இவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்ந்த இவர்களுக்கு இறைவனின் கருணையினால் 6 குழந்தைகள் என டாக்டர்கள் அறிவித்தவுடன் மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் செலவுகளை நினைத்து வருந்துகின்றனர். 3 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் மாதம் முழுமை அடையுமுன்பே பிறந்துள்ளதால் அவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் உள்ளன.
2000 திர்ஹம் சம்பளத்தில் 1500 திர்ஹம் அபுதாபி ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள சிறிய வீட்டு வாடகையாக ஸாயித் முஹம்மது செலுத்துகிறார். மீதமுள்ள 500 திர்ஹத்தில் குடும்பத்தை சிரமத்தில் ஓட்டவேண்டும் அவருக்கு. குழந்தைகளின் ஹெல்த் இன்ஸூரன்சுக்கு கூட தன்னிடம் பணமில்லை என கவலைக்கொள்கிறார் ஸாயித்.
கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி குழந்தைகள் பிறந்த பொழுதும் இதுவரை மருத்துவமனையை விட்டு செல்லவில்லை அவர்கள். கார்னிச் மருத்துவமனையில் சில நாட்கள் அவசர சிகிட்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் குழந்தைகள். ஒரு பெண் குழந்தைக்கு அடி வயிற்றில் அறுவை சிகிட்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ்
அபுதாபியில் 2000 திர்ஹம் சம்பளத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் சுரய்யாவின் கணவர் ஸாயித் முஹம்மது. குழந்தைகள் இல்லாததன் காரணத்தினால் பல ஆண்டுகளாக சிகிட்சைப் பெற்றுவந்தனர் இருவரும்.சிகிட்சைக்கான செலவு இவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்ந்த இவர்களுக்கு இறைவனின் கருணையினால் 6 குழந்தைகள் என டாக்டர்கள் அறிவித்தவுடன் மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் செலவுகளை நினைத்து வருந்துகின்றனர். 3 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் மாதம் முழுமை அடையுமுன்பே பிறந்துள்ளதால் அவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் உள்ளன.
2000 திர்ஹம் சம்பளத்தில் 1500 திர்ஹம் அபுதாபி ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள சிறிய வீட்டு வாடகையாக ஸாயித் முஹம்மது செலுத்துகிறார். மீதமுள்ள 500 திர்ஹத்தில் குடும்பத்தை சிரமத்தில் ஓட்டவேண்டும் அவருக்கு. குழந்தைகளின் ஹெல்த் இன்ஸூரன்சுக்கு கூட தன்னிடம் பணமில்லை என கவலைக்கொள்கிறார் ஸாயித்.
கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி குழந்தைகள் பிறந்த பொழுதும் இதுவரை மருத்துவமனையை விட்டு செல்லவில்லை அவர்கள். கார்னிச் மருத்துவமனையில் சில நாட்கள் அவசர சிகிட்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் குழந்தைகள். ஒரு பெண் குழந்தைக்கு அடி வயிற்றில் அறுவை சிகிட்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ்


தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்கு