பிரபலமான இடுகைகள்

20 ஜனவரி, 2011

மருத்துவம் குறிப்பு

 
 

உணவு... மருந்து... கவனம்!

உணவு... மருந்து... கவனம்!

சில நோய்களுக்கான மருந்து களை சாப்பிடும் காலகட்டத்தில் மிகுந்த ஆரோக்கி யம் தருவதாக நம்பும் உணவு வகைகளைக் கூட சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் எதிர் விளைவுகள் ஏற்பட்டு விடும்.

1. தொற்றுநோயின் பாதிப்பிற்காக நீங்கள் `ஆன்டிபயாடிக்' மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் பாலையும், `யோகர்ட்' உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இறைச்சியையும் ஒதுக்கி விடலாம். இந்த உணவுகள், குடல் அமிலங்களுடன் கலந்து மருநëதுகளைக் கிரகித்துக் கொள்ளும் உடலின் திறனைக் குறைக்கும். பழங்களையும், கொட்டை வகைகளையும் சாப்பிடுங்கள். அவை, தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். ஆனால் `ஆன்டிபயாட்டிக்' எடுத்துக் கொள்ளும் காலம் முடிவடைந்ததும், உங்கள் குடலின் நுண்ணுயிர்களை உயிர்ப்பிக்கும் விதமாக `லஸ்சி' சாப்பிடலாம். உங்கள் குடலில் உள்ள பாக்டீரியா (`புரோபிட்டியோக்ஸ்'), குடலின் இயற்கையான அமிலச் சமநிலையை மீண்டும் ஏற்படுத்த உதவும்.

2. வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறீர்களா? வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு'களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். வயிற்றுப்போக்கை அவை மோசமாக்கவே செய்யும்.

3. ஒவ்வாமையால் அவதிப்பட்டு மருந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ரா பெர்ரி போன்றவற்றைத் தவிருங்கள். ஞாபகத்தில் கொள்ளுங்கள்- புரதங்கள், குறிப்பாக விலங்கு புரதங்கள் ஒவ்வாமையைத் தூண்டவே செய்யும்.

4. நீங்கள் தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? அப்படியானால், கால்சியம் நிறைந்த உணவுகள், முட்டைக் கோஸ், சோயாபீன்ஸ் போன்ற வற்றைத் தவிருங்கள். அப்படியே சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். தைராய்டு மருந்து வெறும் வயிற்றில், அதேநேரம் தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. நீங்கள் வலி நிவாரணி மருந்து (உதாரணம்: பாராசிட்டமால்) எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும்.

6. மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம்.

7. மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் கூறினால் ஒழிய அவ்வாறு செய்ய வேண்டாம். அது, மருந்து செயல்படும் விதத்தை மாற்றலாம்.

8. மருந்து சாப்பிடும் அதே நேரத்தில் வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடுகிறீர்களா? வேண்டாம். வைட்டமின்களும், தாதுக்களும் சில மருந்துகளின் செயல்வேகத்தை குறைத்து விடும்.

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ப்போது‌ம் டெ‌ன்ஷனா? மன அழு‌த்‌த‌‌த்தா‌ல் அ‌வ‌தி‌ப்படு‌கி‌றீ‌ர்களா? ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌கிறதா? கை‌யி‌ல் வெ‌‌ண்ணையை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைவானே‌ன்? ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது.

சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்து நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர். எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், வார‌த்‌தி‌ல் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு மனு அழு‌த்த‌ம் குறை‌ந்‌திரு‌ந்தது.

இது வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு ‌ஆ‌‌ய்வு ம‌ட்டும‌ல்ல. அதாவது அ‌றி‌விய‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் இதனை ஆ‌ய்வு செ‌ய்தவ‌ர்க‌ள் ‌விள‌க்கு‌கிறா‌ர்க‌ள். WD அதாவது, அலுவலக ‌பிர‌ச்‌சினைக‌ள், ‌வீ‌ட்டு ‌பிர‌ச்‌சினைக‌ள் என எதையு‌ம் த‌ங்களது படு‌க்கை அறை‌க்கு‌ள் நுழைய ‌விடாம‌ல், வா‌ழ்‌க்கை‌த் துணையை அ‌‌ன்பாக நட‌த்து‌ம், ஒருவரு‌க்கொருவ‌ர் த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு, மன அழு‌த்த‌த்து‌க்கு காரணமான கா‌ர்டிசா‌ல் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் குறைவான அள‌விலேயே சுர‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் மன அழு‌த்த‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சில த‌ம்ப‌திகளு‌க்கு இடையே, நெரு‌க்க‌த்தை உருவா‌‌க்‌கிய‌ப் ‌பிறகு அவ‌ர்களது மன அழு‌த்த‌ம் பெருமளவு குறை‌ந்ததாகவு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர். வெறு‌ம் மன அழு‌த்த‌த்தை‌க் குறை‌ப்பத‌‌ற்காக ம‌ட்‌டு‌ம் நமது வா‌‌ழ்‌க்கை‌த் துணையை‌க் க‌ட்டி‌பிடி‌ப்பதா‌ல் ‌எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. இருவருமே மன‌ம் ஒரு‌மி‌த்து, த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக நெரு‌க்கமாக இரு‌ப்பதா‌ல்தா‌ன் உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம். இதையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ‌பீ‌ட் டி‌ட்ச‌ன்.



குடல்நலக்கேடு' ஏன்... எப்படி?

இவை ஆரோக்கியம் தொடர்புடைய மூடநம்பிக்கைகள்...! * மஞ்சள் காமாலைக்கு உரிய மருத்துவம் பார்க்காமல் சூடு வைப்பது; அதனால் ஏற்படுகின்ற விபரீதங்கள், வலிப்பு நோய் வரும்போது அதை நிறுத்த இரும்புத்துண்டு, சாவி, கத்தி போன்ற பொருட்களைக் கொடுப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் இன்றுவரை தொடர்கிறது.

இதுபோன்ற தவறான சிகிச்சை கொடுப்பதும், காலம் தாழ்த்துவதும் உயிருக்கே ஆபத்து.

* குழந்தைகளின் குடலைச் சுத்தம் செய்வதற்காக அடிக்கடி பேதிமருந்து, விளக்கெண்ணை போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது. இதனால், குடல்நலக்கேடு உண்டாகி விடும்.

* குழந்தைகளுக்கு சூடு இருப்பதாக நினைத்து அதைத் தணிப்பதற்காக தேவைக்கு அதிகமாக எண்ணையை தேய்த்துக் குளிப்பாட்டுதல், மூக்கு நாசியிலும், காதுத் துவாரத்திலும், கண்ணிலும் எண்ணை விடுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுத்தும்போது நுரையீரல் அழற்சி ஏற்படும்.

* சாம்பிராணி கொண்டு புகை போடக்கூடாது. எங்கும் கலப்படம். எதிலும் கலப்படம் என்கிற நிலையில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இதில் இருக்கலாம்.

* முட்டை, பயறு மாவு போன்ற தேவையற்ற பொருட்களைக் கொண்டு உடம்பில் தேய்த்துக் குளிப்பாட்டும்போது, ஒவ்வாமையால் தோலில் அரிப்பும், தடிப்பும் ஏற்படலாம். தேய்த்துக் கொள்ளும் போது பிற்காலத்தில் ஒவ்வாமையின் அறிகுறிகள் தோன்றிடும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

* கண்நோய்க்கு, தாய்ப்பால், இலைச்சாறு போன்றவற்றை அறியாமையால் விடுவதால் நோய் தீர்வதில்லை. மாறாக, கண் பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்யும்.

* குடல் புழுக்களை அகற்றுவதற்காக, வேப்பெண்ணையைக் குழந்தைகளுக்கு கொடுப்பதால், நுரையீரலில் இறங்கி, ரத்தத்தின் மூலமாக மூளையைப் பாதிக்கும். அதனால், கை, கால்கள் செயலிழத்தல், நினைவிழத்தல் மட்டுமின்றி உயிருக்கே ஆபத்தாகவும் முடியும்.

* அம்மை நோய் கண்டால், அம்மனுக்கு குற்றம் எனக்கூறி சிகிச்சை மேற்கொள்ளாமல் இருக்கக் கூடாது.

* அம்மைநோய் மற்றும் பிரைமரி காம்ப்ளக்ஸ் என்னும் ஆரம்பக்கட்ட காசநோயை அடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே குறைந்து விடும். அதனால், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

* உடல்நலம் பாதிக்கப்படும் போது சீதபேதியும், வயிற்றுப்போக்கும் தொடர்ச்சியாக ஏற்படுவதுண்டு. அதனால் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* `அக்கி' எனப்படும் வைரஸ் தொற்றுநோயால், தோலில் கொப்புளங்கள் உண்டாகும்போது, செம்மண் கொண்டு எழுதுவதும், கரும்புள்ளி, செம்புள்ளிகளைப் பதிப்பதும் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டங்கள். இதனால் நோயின் கடுமை அதிகமாகி, வில்வாத குதிரை வலிப்பு நோய்க்கிருமிகள், பிற கிருமிகள் போன்றவை தொற்றும் அபாயம் ஏற்படும்.

* சிறுநீரகக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளின் முகம், கை, கால், உடல் வீங்கி விடும். அதைப்பார்த்து ஊதுகாமாலை, சுரைக்காய்அம்மை ஏற்பட்டு விட்டதென்று எந்த வகையான சிகிச்சையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தக்கூடாது. உரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

* குழந்தைகளின் உடல் நாளுக்குநாள் மெலிந்து கொண்டே போனால், அதற்கான காரணங்களை மருத்துவர் மூலம் அறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

* காசநோயின் ஆரம்பக்கட்ட நிலை, வலிப்பு நோய், இதயநோய்கள் போன்றவற்றிற்கு நீண்ட நாளைய சிகிச்சை தேவைப்படும்.

* சிகிச்சையின் போது நோயின் அறிகுறிகள் தென்படவில்லை எனில், நோயின் அறிகுறிகள் கட்டுக்குள் இருப்பினும் நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. மருத்துவரின் ஆலோசனையைக் கொண்டே சிகிச்சைÛயை தொடர்வதா, வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும்.

* போலி டாக்டர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உடல்நலம் கெடுவதோடு மட்டுமல்லாமல், அதிக செலவும் ஏற்படும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

,