பிரபலமான இடுகைகள்

23 பிப்ரவரி, 2011

மறக்கப்பட்ட மகனின்

மறக்கப்பட்ட மகனின் உறவு : அனாதையான மூதாட்டி

  


அழகர்கோவில் : தோளில் தூக்கி தாலாட்டி, சீராட்டி வளர்த்த மகனின் இதயம் மரத்துப் போனதால் ஒருவேளை உணவுக்கு வழியின்றி பரிதவிக்கிறார் கமலா.

தண்டக்காரன்பட்டியை சேர்ந்தவர் கமலா (86). இவரது மகன் மாரியப்பன் மதுரை தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி லதா. முதுமையில் வாடிய கமலா பெற்ற மகன் வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கு பணிவிடைகள் செய்ய மனமில்லாத மகன், மருமகள் சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி அழகர்கோயிலுக்கு அழைத்து வந்தனர். சுந்தரராஜ பெருமாள் கோயில் முன் உள்ள மண்டபத்தில் இறக்கி விட்டு டிக்கெட் வாங்கி வருகிறோம் எனக் கூறி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. மாலை வரை அனாதையாக தவித்த அவரை, கோயில் ஊழியர்கள் சிலர் குப்பை அள்ளும் டிரைசைக்கிளில் வைத்து பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு கட்டடத்தில் போட்டுச்சென்றனர். பல நாட்களாக ஒரு வேளை சாப்பாடுகூட கிடைக்காமல் பட்டினியால் வாடுகிறார். பசியால் வாடும் இவர் சிலரிடம் சாப்பாடு, டீ வாங்கித் தரும்படி கூறுகிறார். இரக்கமற்ற ஒருவர் டீ வாங்கித் தருவதாகக் கூறி, கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சென்று விட்டார். உணவிற்கு வழியில்லாமல் இருக்கும் இவருக்கு மாவட்ட சமூக நலத்துறையினரோ, பிற அமைப்பினரோ ஆதரவு தர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

,