பிரபலமான இடுகைகள்
-
உணவு... மருந்து... கவனம்! உணவு... மருந்து... கவனம்! புதன், 19 ஜனவரி 2011 05:28 சில நோய்களுக்கான மருந்து களை சாப்பிடும் காலகட்டத்தில் மிக...
-
எனக்கு பிடித்த Top 10 காதல் திரைப்படங்கள் - காதல் ஸ்பெஷல் தமிழ் சினிமாவில் காதல் இல்லாமல் வந்த படங்கள் என்பது மிகவும் குறைவு. மொத்தத்தில் ...
-
ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் ஐடியா! குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில்...
-
மறக்கப்பட்ட மகனின் உறவு : அனாதையான மூதாட்டி அழகர்கோவில் : தோளில் தூக்கி தாலாட்டி, சீராட்டி வளர்த்த மகனின் இதயம் மரத்துப் போனதால்...
-
ஜப்பானில் ரஜினி: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஜப்பானில் ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என நாம் அறிந...
-
விண்டோசில் விரும்பிய எழுத்துக்களை கொண்டுவர கணிணியில் உள்ள எழுத்துக்களை நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ற படி மாற்றிக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு ...
26 ஜனவரி, 2011
ஊத்தங்கரை கல்லூரி
ஊத்தங்கரை கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றது யார்?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் கனகலட்சுமி (வயது21). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கமாக கொண்டம்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து காட்டுப்பாதையில் நடந்து வந்து பாம்பாறு அணை பிரிவு ரோட்டில் பஸ் ஏறிச்செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் காலை கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. நேற்று காலை கனகலட்சுமி ஒரு மாந்தோப்பில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அவரது பை கொண்டம்பட்டி வரும் சாலையில் கிடந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏ.ஜி.பாபு, கூடுதல் சூப்பிரண்டு செந்தில் குமார், மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர்.
இந்தக் கொலை குறித்து விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கூடுதல் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை சூப்பிரண்டுகள் காசி விசுவநாதன் (ஊத்தங்கரை), வைத்தியலிங்கம்(பர்கூர்) மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சங்கர் (ஊத்தங்கரை), எல்லப்பன் ( சிங்காரப்பேட்டை),சிவகுமார்(பர்கூர்) மற்றும் போலீசார் இந்த தனிப்படையில் இடம்பெற்று உள்ளனர்.
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். மாணவி கனகலட்சுமி பயன்படுத்திய செல்போனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
மாணவி கனகலட்சுமியின் செல்போனுக்கு 387 போன் கால்கள் வந்து உள்ளன. அந்த போன் நம்பர்கள் மற்றும் அந்த நம்பர்கள் யார்-யார் பெயரில் உள்ளன என்ற விவரங்களை போலீசார் சேகரித்து உள்ளனர். அதில் அதிகமாக அவரிடம் பேசியவர்கள் யார்-யார் என்று பட்டியல் எடுத்து அவர்களை அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இன்னொரு தனிப்படை போலீசார் மாணவியிடம் பேசிய மற்ற அனைவரையும் அழைத்து வந்து விசாரித்து வருகிறது. இன்னொரு தனிப்படை அவருடன் படித்து வரும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விசாரித்து வருகிறது. மாணவி கனகலட்சுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அதாவது நேற்று முன்தினம் காலை முதல் இரவு 8 மணி வரை அவருடன் பேசியவர்களை அழைத்து வந்து இன்னொரு தனிப்படை விசாரித்து வருகிறது.
இன்னொரு தனிப்படை அவரது கிராமத்தில் முகாமிட்டு உள்ளது. ஒரு தனிப்படை பிளஸ்-2 வரை அவருடன் படித்த மாணவ-மாணவிகள் மற்றும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் ஆகியோரிடம் விசாரித்து வருகிறது.
மாணவி கல்லூரிக்கு செல்லும்போது அவருடன் சென்றவர்கள் யார்- யார், அவர் நடந்து செல்லும் பாதையில் யார்- யார் நடந்து செல்வார்கள் என்ற விவரங்களை இன்னொரு தனிப்படை விசாரித்து வருகிறது.
நேற்று மாலை முதல் சந்தேகப்படும் 25 பேரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மாணவி கனகலட்சுமி மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
மாணவியின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டு உள்ளது. பற்கள் உடைக்கப்பட்டு உள்ளன. அவரது உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. அதாவது குச்சியால் மர்ம உறுப்பு உள்பட பல்வேறு இடங்களில் குத்தி இருக்கிறார்கள். இதனால் காதல் தகராறில் இந்தக்கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் மாணவி கனகலட்சுமி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கல்லுரியில் இருந்து பஸ்சில் வந்து இறங்கி உள்ளார். வழக்கமாக அவர் பாம்பாறு அணைப்பிரிவில் இறங்குவார். ஆனால் நேற்று முன்தினம் ஊத்தங்கரையில் வந்து இறங்கி உள்ளார். இதனால் அவரை ஊத்தங்கரைக்கு வரவழைத்தது யார் என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இன்னும் இரண்டொரு நாளில் இந்தக் கொலையில் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று எதிர்பர்ர்க்கப்படுகிறது.
20 ஜனவரி, 2011
பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்! - சினேகாவின் ஜாலி பேட்டி
உடனிருப்பவர்களையும் உற்சாகம் கொள்ள வைக்கும் குணம் சிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர் சினேகா. அந்த முகமும் அசரடிக்கும் புன்னகையும்...
தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவை. பொங்கலுக்கு ஒரு பேட்டி என்றதும், அதுக்கென்ன தாராளமா...
என்னை பொங்கல் வைத்துக் காட்டச் சொல்லாமலிருந்தால் சரி... ஏன்னா எனக்கு பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்", என எடுத்த எடுப்பில் டாப் கியரில் போக, பொங்கலின் குதூகலம் அங்கேயே தொடங்கிவிட்டது.
பொங்கல் பத்தி ஒரு நடிகையா உங்க அனுபவம்?
பொங்கல்னா எல்லா நடிகைகளுக்குமே படம் ரிலீஸ்தான் ஸ்பெஷலா இருக்கும்.... அதுவும் எனக்கு பொங்கலன்று வெளியான படங்கள் மறக்கமுடியாதவையா அமைஞ்சிருக்கு.என் முதல் படம் விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் இப்படி நிறைய படங்கள் வெளியானது பொங்கல் தினத்தில்தான். மறக்க முடியாத படங்கள் அவை.
பொங்கல் கொண்டாடியிருக்கீங்களா...?
நானும் இந்த ஊர் பொண்ணுதானே... பொங்கல்னா எனக்கும் ரொம்ப விசேஷமான நாள்தான். பொங்கலப்போ குடும்பத்தோட இருக்கிறது ரொம்ப உற்சாகமா இருக்கும். சினிமாவுல ஆயிரம் புது காஸ்ட்யூம் போட்டாலும், பொங்கலுக்கு புதுசா ட்ரஸ் எடுக்கறது தனி பரவசம். அதை நானும் அனுபவிச்சிருக்கேன். மத்தபடி பொங்கல் நல்லா சாப்பிடுவேன். சாப்பிட்டுட்டா எடை போட்டுடுமே.. அதுக்காக வொர்க் அவுட் பண்ணனுமே என்ற கவலையுடன்!
இந்த வருஷம் பொங்கலுக்கு உங்க படம் எதுவும் வரலையா?
வருஷா வருஷம் எப்படியாவது பொங்கலுக்கு அல்லது அந்த சீஸனுக்கு ஒரு படம் வந்துடும். போன வருஷம் கூட கோவா வந்தது. பொங்கலுக்கு இல்ல... ஜனவரில. இந்த வருஷம் பவானி ஐபிஎஸ். இந்த மாச கடைசில வரும்னு நினைக்கிறேன்.
நடிக்க வந்ததிலிருந்து உங்களுக்கான இடத்தை தொடர்ந்து தக்க வச்சிக்கிட்டிருக்கீங்க... தொடர்ந்து செய்திகளின் நாயகி நீங்கதான். அந்த ரகசியம் என்ன?
எதையும் நான் திட்டமிட்டு உருவாக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் செய்திகளுக்குக் காரணம். மற்றபடி சினிமாவை முழுமையாக நேசிக்கிறேன். பணம் ஒன்றே குறிக்கோள் என்று நினைக்காமல், கண்ணியமான வேடங்கள், நிறைவான வேடங்களை மட்டுமே தொடர்ந்து செய்கிறேன்.
காதல், திருமணம் பற்றியெல்லாம்...
அடடா.. ஆரம்பிச்சிட்டீங்களா. அதெல்லாம் வரும்போது வரும்... நடக்கும் போது நடக்கும். அதுவரை என்காதல் சினிமாதான்! என்றார் சிரித்த முகத்துடன்.

நாம் இணையத்தில் ஒவ்வொரு தளங்களை ஓபன் செய்யும் போது அவைகள் அந்த தளத்தில் இருக்கும் விட்ஜெட்டுக்களின் அளவை பொருத்து ஓபன் ஆகும் ஒரு சில தளங்கள் ஓபன் ஆக மிகவும் தாமதமாகின்றன இப்படி இரண்டு தளங்களால் ஓபன் ஆக எது அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று பார்ப்போமே. நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் உங்கள் பிளாக்கோடு மற்ற பிளாக்குகளை ஒப்பிட்டு பார்க்கலாமே.
இணையத்தில் வீடியோக்கள் கொட்டி கிடக்கும் இடம் இந்த யு டியூப் இணைத்தளம். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு நமக்கு தேவையான வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி இதில் இல்லை ஆனால் சில மென்பொருட்களை நம் கணினியில் நிறுவினால் இந்த வீடியோக்களை டௌன்லோட் செய்யலாம் ஆனால் இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவுவதால் நம் கணினியில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று பயமாக உள்ளதா. அப்படி உள்ளவர்கள் ஆன்லைனிலேயே யுடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.கீழே யுடியூப் வீடியோக்களை டவுன்லோட் சிறந்த 15 இணையதளங்களை கொடுத்து உள்ளேன். இதில் சென்று உங்களுக்கு தேவையான வீடியோவின் YOUTUBE URL கொடுத்து அருகில் கொடுத்து இருக்கும் பட்டனை அழுத்தினால் உங்கள் YOUTUBE வீடியோ உங்கள் கணினியில் சேமிக்க படும்.
இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக்கிறதோ அதற்கு இருமடங்கு கெட்ட செய்தியையும் கொடுக்கிறது. இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது இந்த youtube தளம். படிப்பிற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் இப்படி பல வகைகளில் வீடியோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள்ளன. youtube ல் இந்த ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர்க்க ஒரு வசதியை youtube தளம் வழங்குகிறது.
தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவை. பொங்கலுக்கு ஒரு பேட்டி என்றதும், அதுக்கென்ன தாராளமா...
என்னை பொங்கல் வைத்துக் காட்டச் சொல்லாமலிருந்தால் சரி... ஏன்னா எனக்கு பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்", என எடுத்த எடுப்பில் டாப் கியரில் போக, பொங்கலின் குதூகலம் அங்கேயே தொடங்கிவிட்டது.
பொங்கல் பத்தி ஒரு நடிகையா உங்க அனுபவம்?
பொங்கல்னா எல்லா நடிகைகளுக்குமே படம் ரிலீஸ்தான் ஸ்பெஷலா இருக்கும்.... அதுவும் எனக்கு பொங்கலன்று வெளியான படங்கள் மறக்கமுடியாதவையா அமைஞ்சிருக்கு.என் முதல் படம் விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் இப்படி நிறைய படங்கள் வெளியானது பொங்கல் தினத்தில்தான். மறக்க முடியாத படங்கள் அவை.
பொங்கல் கொண்டாடியிருக்கீங்களா...?
நானும் இந்த ஊர் பொண்ணுதானே... பொங்கல்னா எனக்கும் ரொம்ப விசேஷமான நாள்தான். பொங்கலப்போ குடும்பத்தோட இருக்கிறது ரொம்ப உற்சாகமா இருக்கும். சினிமாவுல ஆயிரம் புது காஸ்ட்யூம் போட்டாலும், பொங்கலுக்கு புதுசா ட்ரஸ் எடுக்கறது தனி பரவசம். அதை நானும் அனுபவிச்சிருக்கேன். மத்தபடி பொங்கல் நல்லா சாப்பிடுவேன். சாப்பிட்டுட்டா எடை போட்டுடுமே.. அதுக்காக வொர்க் அவுட் பண்ணனுமே என்ற கவலையுடன்!
இந்த வருஷம் பொங்கலுக்கு உங்க படம் எதுவும் வரலையா?
வருஷா வருஷம் எப்படியாவது பொங்கலுக்கு அல்லது அந்த சீஸனுக்கு ஒரு படம் வந்துடும். போன வருஷம் கூட கோவா வந்தது. பொங்கலுக்கு இல்ல... ஜனவரில. இந்த வருஷம் பவானி ஐபிஎஸ். இந்த மாச கடைசில வரும்னு நினைக்கிறேன்.
நடிக்க வந்ததிலிருந்து உங்களுக்கான இடத்தை தொடர்ந்து தக்க வச்சிக்கிட்டிருக்கீங்க... தொடர்ந்து செய்திகளின் நாயகி நீங்கதான். அந்த ரகசியம் என்ன?
எதையும் நான் திட்டமிட்டு உருவாக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் செய்திகளுக்குக் காரணம். மற்றபடி சினிமாவை முழுமையாக நேசிக்கிறேன். பணம் ஒன்றே குறிக்கோள் என்று நினைக்காமல், கண்ணியமான வேடங்கள், நிறைவான வேடங்களை மட்டுமே தொடர்ந்து செய்கிறேன்.
காதல், திருமணம் பற்றியெல்லாம்...
அடடா.. ஆரம்பிச்சிட்டீங்களா. அதெல்லாம் வரும்போது வரும்... நடக்கும் போது நடக்கும். அதுவரை என்காதல் சினிமாதான்! என்றார் சிரித்த முகத்துடன்.
Youtube வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நம் பதிவில் பகிர
உண்மையிலேயே இந்த வசதி பதிவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளது. கண்டிப்பாக பயன் படுத்தி கொள்ளுங்கள். என்ன வசதின்னு கேக்கறீங்களா தொடர்ந்து படிங்க. நாம் பதிவில் வாசகர்களுக்காக சில யூடியூப் வீடியோக்களை பகிருவோம். இந்த முறையில் நாம் வீடியோக்களை பகிரும் போது அந்த முழு வீடியோவையும் நாம் பகிர வேண்டும். அந்த வீடியோவில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றாலும் முழு வீடியோவையும் நாம் பகிர வேண்டும். ஆதலால் வாசகர்கள் அதிக நேரம் செலவழித்து அந்த வீடியோவை பார்ப்பதை தவிர்த்து விடுவதால் நாம் சொல்ல வந்த கருத்து மற்றவர்கள் இடத்தில் சரியாக போய் சேருவதில்லை.
குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர வேண்டுமென்றால் அந்த முழு வீடியோவையும் டவுன்லோட் செய்து பின்னர் சில மென்பொருள் உதவியோடு அந்த பகுதியை மட்டும் கட் செய்து பின்னர் நம் பிளாக்கில் அப்லோட் செய்து மற்றவர்களுக்கு பகிர வேண்டும். இந்த முறையில் நம்முடைய நேரம் வீணாக விரயமாகிறது. நமக்கு கிடைக்கும் குறிகிய நேரத்தில் இப்படி நேரத்தை செலவழிக்க எந்த பதிவரும் விரும்புவதில்லை ஆகையால் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது.
இந்த பிரச்சினைகளை தீர்க்கவே ஒரு அருமையான தளம் நமக்கு உதவி செய்கிறது.
குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர வேண்டுமென்றால் அந்த முழு வீடியோவையும் டவுன்லோட் செய்து பின்னர் சில மென்பொருள் உதவியோடு அந்த பகுதியை மட்டும் கட் செய்து பின்னர் நம் பிளாக்கில் அப்லோட் செய்து மற்றவர்களுக்கு பகிர வேண்டும். இந்த முறையில் நம்முடைய நேரம் வீணாக விரயமாகிறது. நமக்கு கிடைக்கும் குறிகிய நேரத்தில் இப்படி நேரத்தை செலவழிக்க எந்த பதிவரும் விரும்புவதில்லை ஆகையால் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது.
இந்த பிரச்சினைகளை தீர்க்கவே ஒரு அருமையான தளம் நமக்கு உதவி செய்கிறது.
- முதலில் இந்த லிங்கை snipsnip.it க்ளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- மேலே உள்ள படத்தில் நான் காட்டியுள்ள இடத்தில் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவின் URL கொடுத்து உங்கள் கீபோர்டின் என்ட்டர் கீயை அழுத்தவும்.
- உங்களுக்கு கீழே இருப்பது போல விண்டோ வரும்.
- உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவின் பகுதியின் START TIME மற்றும் வீடியோவின் END TIME நிமிடம் மற்றும் நேரத்துடன் சரியாக கொடுத்து கீழே உள்ள SNIP IT என்ற பட்டனை அழுத்தவும்.
- அடுத்து உங்கள் வீடியோ ரெடியாகி விடும் அதில் அந்த வீடியோவிற்கான EMBED URL கொடுக்கப்படும் அதை முழுவதும் காப்பி செய்து கொள்ளுங்கள். (நீங்கள் உருவாக்கிய வீடியோவின் PREVIEW பார்க்க வேண்டுமென்றால் கீழே லிங்கை க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும்)
| அநியாயம் ஆனால் உண்மை ! சினேகாவுடன் ஸ்டில் எடுக்க 5000 ரூபாயாம்...! 2011-01-12 23:42:15 |
இந்த சம்பவம் அரங்கேறியது வேறு எங்குமல்ல... போலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டும் ரோட்டரி கிளப் கருத்தரங்கம் ஒன்றில்தான்! ரோட்டரி சங்கத்தின் பாண்டிச்சேரி மாவட்ட கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் போலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நடிகை சினேகா கலந்து கொண்டு பேசினார். அப்போது போலியோவை ஒழிக்க என்னால் ஆன உதவியை செய்வேன் என்று கூறிய சினேகா, தன் பங்குக்கு ரூ. 15 ஆயிரத்தை கொடுத்தார். அதன் பிறகு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலரும் போலியோ ஒழிப்பு நிதியில் தங்கள் பங்குக்கு ஐநூறு ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் வழங்கினார்கள். பின்னர் ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடை வழங்கியவர்கள் மட்டும் மேடைக்கு அழைக்கப்பட்டு, சினேகாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 5 ஆயிரத்திற்கு குறைவாக நன்கொடை வழங்கியவர்களுக்கு சினேகாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. |
ஒரே நேரத்தில் இரண்டு தளங்களின் ஓபன் ஆகும் நேரத்தை ஒப்பிட்டு பார்க்க

நாம் இணையத்தில் ஒவ்வொரு தளங்களை ஓபன் செய்யும் போது அவைகள் அந்த தளத்தில் இருக்கும் விட்ஜெட்டுக்களின் அளவை பொருத்து ஓபன் ஆகும் ஒரு சில தளங்கள் ஓபன் ஆக மிகவும் தாமதமாகின்றன இப்படி இரண்டு தளங்களால் ஓபன் ஆக எது அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று பார்ப்போமே. நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் உங்கள் பிளாக்கோடு மற்ற பிளாக்குகளை ஒப்பிட்டு பார்க்கலாமே.
- இதற்கு முதலில் இந்த லிங்கில் Which Loads Faster செல்லவும். சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் அவர்களே நான்கு வகை ஒப்பிட்டு தளங்களை கொடுத்து இருப்பார்கள் தேவையென்றால் பார்க்கவும் அல்லது நீங்களே தளங்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால் கீழே உள்ள Try my own matchup என்ற பட்டனை அழுத்தவும்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உங்களுக்கு தேவையான இரண்டு தளங்களை கொடுத்து Go என்பதை க்ளிக் செய்யவும்.
- GO அழுத்தியவுடன் இரண்டு தளங்களும் ஓபன் ஆகி எந்த தளம் ஓபன் ஆக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறது என்ற முடிவு வரும்.
டிஸ்கி: இது எந்த அளவிற்கு சரியான நேரத்தை கணக்கிடும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது. எல்லாமே ஒரு ஜாலிக்காக தான்.
ஆன்லைனில் யு டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய சிறந்த 20 இணைய தளங்கள்
இணையத்தில் வீடியோக்கள் கொட்டி கிடக்கும் இடம் இந்த யு டியூப் இணைத்தளம். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு நமக்கு தேவையான வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி இதில் இல்லை ஆனால் சில மென்பொருட்களை நம் கணினியில் நிறுவினால் இந்த வீடியோக்களை டௌன்லோட் செய்யலாம் ஆனால் இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவுவதால் நம் கணினியில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று பயமாக உள்ளதா. அப்படி உள்ளவர்கள் ஆன்லைனிலேயே யுடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.Youtube ல் ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர்க்க
இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக்கிறதோ அதற்கு இருமடங்கு கெட்ட செய்தியையும் கொடுக்கிறது. இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது இந்த youtube தளம். படிப்பிற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் இப்படி பல வகைகளில் வீடியோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள்ளன. - முதலில் இந்த லிங்கில் www.youtube.com க்ளிக் செய்து youtube தளத்திற்கு செல்லுங்கள்.
- இப்பொழுது உங்களுக்கு youtube தளம் வந்து இருக்கும். அதில் நீங்கள் கீழ் பகுதிக்கு செல்லுங்கள்.
- அங்கு Safety mode : Off என்று லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.
- இந்த லிங்கை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
- இதில் நீங்கள் On என்பதை க்ளிக் செய்து Save கொடுத்து விடுங்கள்.
- அவ்வளவு தான் youtube ல் ஆபாச வீடியோக்கள் முற்றிலுமாக தவிர்க்க பட்டுவிட்டது.
- இதை உறுதி செய்ய நீங்கள் ஏதேனும் கொடுத்து தேடி பாருங்கள் No videos found என்ற செய்தியே வரும்.
- இனி எந்த பயமும் இன்றி நாமும் பிள்ளைகளும் வீடியோக்களை ரசித்து மகிழலாம்.
PDF பைலை பூட்ட,திறக்க,ஒட்ட,வெட்ட சிறந்த மென்பொருள்
நாம் நம்முடைய விவரங்களையோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய செய்திகளையோ PDF பைலாக மாற்றி வைத்திருப்போம். சாதரணமாக நாம் உருவாக்கும் PDF பைல்களை அனைவரும் Print எடுக்கும் வகையிலும் காப்பி செய்யும் வகையிலும் உருவாக்குகிறோம். அதனால் நம் பைல்கள் மாற்ற படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை எப்படி யாரும் திறக்காதவண்ணம் நாம் பூட்டு போடுவது என்று இங்கு காணலாம்.
உபயோகிக்கும் முறை:
- கீழே உள்ள Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொண்டு உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
- இந்த மென்பொருள் வெறும் 5MB அளவே கொண்டது.
- இந்த மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். continue Trial என்பதை க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் முதலில் Add என்பதை க்ளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொண்டு Lock என்ற பட்டனை அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.இதில் உங்கள் பைலுக்கு Password தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு தேவையான Password கொடுத்து உங்கள் pdf பைலை பாதுகாப்பானதாக மாற்றி கொள்ளுங்கள்.
- அடுத்து உங்கள் pdf பைலில் நிறைய பக்கங்கள் இருக்கலாம் ஒரு ஒரு பக்கத்தையும் தனித்தனியாக பிரிக்க இதில் உள்ள Split என்ற வசதி பயன்படுகிறது.
- அதற்கு முதலில் உங்கள் pdf பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அடுத்து Split என்று இருக்கும் பட்டனை ஒரு க்ளிக் செய்தாலே போதும் உங்கள் பைலின் பக்கங்கள் தனி தனி பைல்களாக மாறிவிடும்.
- அடுத்த வசதி Merge வசதி இந்த வசதி வெவ்வேறான PDF பைல்களை ஒன்றாக ஆக்க பயன்படுகிறது. இவைகள் அனைத்தும் சுலபமான வேலை என்பதால் அதிக விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கிறேன்.
- சரி இந்த முறையில் நீங்கள் பூட்டு போட்ட pdf பைல் பாதுகாப்பானதா என அறிய வேண்டுமா உங்கள் PDF பைலை திறந்து கொண்டு கீழே உள்ள முறையில் சென்று பாருங்கள் அனைத்தும் தடை செய்ய பட்டிருக்கும்.
- இந்த பைலை UNLOCK செய்ய பைலை தேர்வு செய்து கொண்டு உங்கள் password கொடுத்தால் திறந்து விடும்.
இது நல்ல மென்பொருள். இதில் உள்ள பிரச்சினை என்றால் இது trail version 30 நாட்கள் வேலை செய்யும்.
மருத்துவம் குறிப்பு
உணவு... மருந்து... கவனம்!
உணவு... மருந்து... கவனம்!
புதன், 19 ஜனவரி 2011 05:28
சில நோய்களுக்கான மருந்து களை சாப்பிடும் காலகட்டத்தில் மிகுந்த ஆரோக்கி யம் தருவதாக நம்பும் உணவு வகைகளைக் கூட சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் எதிர் விளைவுகள் ஏற்பட்டு விடும். 1. தொற்றுநோயின் பாதிப்பிற்காக நீங்கள் `ஆன்டிபயாடிக்' மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் பாலையும், `யோகர்ட்' உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இறைச்சியையும் ஒதுக்கி விடலாம். இந்த உணவுகள், குடல் அமிலங்களுடன் கலந்து மருநëதுகளைக் கிரகித்துக் கொள்ளும் உடலின் திறனைக் குறைக்கும். பழங்களையும், கொட்டை வகைகளையும் சாப்பிடுங்கள். அவை, தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். ஆனால் `ஆன்டிபயாட்டிக்' எடுத்துக் கொள்ளும் காலம் முடிவடைந்ததும், உங்கள் குடலின் நுண்ணுயிர்களை உயிர்ப்பிக்கும் விதமாக `லஸ்சி' சாப்பிடலாம். உங்கள் குடலில் உள்ள பாக்டீரியா (`புரோபிட்டியோக்ஸ்'), குடலின் இயற்கையான அமிலச் சமநிலையை மீண்டும் ஏற்படுத்த உதவும்.
2. வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறீர்களா? வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு'களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். வயிற்றுப்போக்கை அவை மோசமாக்கவே செய்யும்.
3. ஒவ்வாமையால் அவதிப்பட்டு மருந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ரா பெர்ரி போன்றவற்றைத் தவிருங்கள். ஞாபகத்தில் கொள்ளுங்கள்- புரதங்கள், குறிப்பாக விலங்கு புரதங்கள் ஒவ்வாமையைத் தூண்டவே செய்யும்.
4. நீங்கள் தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? அப்படியானால், கால்சியம் நிறைந்த உணவுகள், முட்டைக் கோஸ், சோயாபீன்ஸ் போன்ற வற்றைத் தவிருங்கள். அப்படியே சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். தைராய்டு மருந்து வெறும் வயிற்றில், அதேநேரம் தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. நீங்கள் வலி நிவாரணி மருந்து (உதாரணம்: பாராசிட்டமால்) எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும்.
6. மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம்.
7. மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் கூறினால் ஒழிய அவ்வாறு செய்ய வேண்டாம். அது, மருந்து செயல்படும் விதத்தை மாற்றலாம்.
8. மருந்து சாப்பிடும் அதே நேரத்தில் வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடுகிறீர்களா? வேண்டாம். வைட்டமின்களும், தாதுக்களும் சில மருந்துகளின் செயல்வேகத்தை குறைத்து விடும்.
மன அழுத்தம் குறைய துணைவரை கட்டிபிடியுங்கள்
வாழ்க்கையில் எப்போதும் டென்ஷனா? மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? சிகிச்சை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? ஆம்.. உங்கள் வாழ்க்கைத் துணையிடமே உள்ளது மருந்து. வாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சுமார் 51 தம்பதிகளிடம் இது குறித்த ஆய்வை நடத்தினர். எப்படிப்பட்ட பணி அமைப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்களாக இருந்தாலும், வாரத்தில் பல முறை துணையைக் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, உடலுறவுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடும் தம்பதிகளுக்கு மனு அழுத்தம் குறைந்திருந்தது.
இது வெறும் கண்துடைப்பு ஆய்வு மட்டுமல்ல. அதாவது அறிவியல் ரீதியாகவும் இதனை ஆய்வு செய்தவர்கள் விளக்குகிறார்கள். WD அதாவது, அலுவலக பிரச்சினைகள், வீட்டு பிரச்சினைகள் என எதையும் தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், வாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கியப் பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாகவும் கூறியுள்ளனர். வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும். இதையும் புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் ஆய்வு மேற்கொண்ட பீட் டிட்சன்.
குடல்நலக்கேடு' ஏன்... எப்படி?
ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 05:55
இவை ஆரோக்கியம் தொடர்புடைய மூடநம்பிக்கைகள்...! * மஞ்சள் காமாலைக்கு உரிய மருத்துவம் பார்க்காமல் சூடு வைப்பது; அதனால் ஏற்படுகின்ற விபரீதங்கள், வலிப்பு நோய் வரும்போது அதை நிறுத்த இரும்புத்துண்டு, சாவி, கத்தி போன்ற பொருட்களைக் கொடுப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் இன்றுவரை தொடர்கிறது. இதுபோன்ற தவறான சிகிச்சை கொடுப்பதும், காலம் தாழ்த்துவதும் உயிருக்கே ஆபத்து.
* குழந்தைகளின் குடலைச் சுத்தம் செய்வதற்காக அடிக்கடி பேதிமருந்து, விளக்கெண்ணை போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது. இதனால், குடல்நலக்கேடு உண்டாகி விடும்.
* குழந்தைகளுக்கு சூடு இருப்பதாக நினைத்து அதைத் தணிப்பதற்காக தேவைக்கு அதிகமாக எண்ணையை தேய்த்துக் குளிப்பாட்டுதல், மூக்கு நாசியிலும், காதுத் துவாரத்திலும், கண்ணிலும் எண்ணை விடுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுத்தும்போது நுரையீரல் அழற்சி ஏற்படும்.
* சாம்பிராணி கொண்டு புகை போடக்கூடாது. எங்கும் கலப்படம். எதிலும் கலப்படம் என்கிற நிலையில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இதில் இருக்கலாம்.
* முட்டை, பயறு மாவு போன்ற தேவையற்ற பொருட்களைக் கொண்டு உடம்பில் தேய்த்துக் குளிப்பாட்டும்போது, ஒவ்வாமையால் தோலில் அரிப்பும், தடிப்பும் ஏற்படலாம். தேய்த்துக் கொள்ளும் போது பிற்காலத்தில் ஒவ்வாமையின் அறிகுறிகள் தோன்றிடும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
* கண்நோய்க்கு, தாய்ப்பால், இலைச்சாறு போன்றவற்றை அறியாமையால் விடுவதால் நோய் தீர்வதில்லை. மாறாக, கண் பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்யும்.
* குடல் புழுக்களை அகற்றுவதற்காக, வேப்பெண்ணையைக் குழந்தைகளுக்கு கொடுப்பதால், நுரையீரலில் இறங்கி, ரத்தத்தின் மூலமாக மூளையைப் பாதிக்கும். அதனால், கை, கால்கள் செயலிழத்தல், நினைவிழத்தல் மட்டுமின்றி உயிருக்கே ஆபத்தாகவும் முடியும்.
* அம்மை நோய் கண்டால், அம்மனுக்கு குற்றம் எனக்கூறி சிகிச்சை மேற்கொள்ளாமல் இருக்கக் கூடாது.
* அம்மைநோய் மற்றும் பிரைமரி காம்ப்ளக்ஸ் என்னும் ஆரம்பக்கட்ட காசநோயை அடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே குறைந்து விடும். அதனால், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
* உடல்நலம் பாதிக்கப்படும் போது சீதபேதியும், வயிற்றுப்போக்கும் தொடர்ச்சியாக ஏற்படுவதுண்டு. அதனால் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* `அக்கி' எனப்படும் வைரஸ் தொற்றுநோயால், தோலில் கொப்புளங்கள் உண்டாகும்போது, செம்மண் கொண்டு எழுதுவதும், கரும்புள்ளி, செம்புள்ளிகளைப் பதிப்பதும் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டங்கள். இதனால் நோயின் கடுமை அதிகமாகி, வில்வாத குதிரை வலிப்பு நோய்க்கிருமிகள், பிற கிருமிகள் போன்றவை தொற்றும் அபாயம் ஏற்படும்.
* சிறுநீரகக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளின் முகம், கை, கால், உடல் வீங்கி விடும். அதைப்பார்த்து ஊதுகாமாலை, சுரைக்காய்அம்மை ஏற்பட்டு விட்டதென்று எந்த வகையான சிகிச்சையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தக்கூடாது. உரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
* குழந்தைகளின் உடல் நாளுக்குநாள் மெலிந்து கொண்டே போனால், அதற்கான காரணங்களை மருத்துவர் மூலம் அறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
* காசநோயின் ஆரம்பக்கட்ட நிலை, வலிப்பு நோய், இதயநோய்கள் போன்றவற்றிற்கு நீண்ட நாளைய சிகிச்சை தேவைப்படும்.
* சிகிச்சையின் போது நோயின் அறிகுறிகள் தென்படவில்லை எனில், நோயின் அறிகுறிகள் கட்டுக்குள் இருப்பினும் நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. மருத்துவரின் ஆலோசனையைக் கொண்டே சிகிச்சைÛயை தொடர்வதா, வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும்.
* போலி டாக்டர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உடல்நலம் கெடுவதோடு மட்டுமல்லாமல், அதிக செலவும் ஏற்படும்.
19 ஜனவரி, 2011
சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்-(வரலாற்று நாயகர்)
சிந்தனைக்கு: மெதுவாக சிந்தனை செய், விரைவாக செயல்படு
வணக்கம் நண்பர்களே இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம். (தேசிய இளைஞர் தினமும்கூட) சுவாமி விவேகானந்தரை வணங்கி இந்த சிறப்பு தினத்திலே சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்வோம்.
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர்.
வணக்கம் நண்பர்களே இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம். (தேசிய இளைஞர் தினமும்கூட) சுவாமி விவேகானந்தரை வணங்கி இந்த சிறப்பு தினத்திலே சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்வோம்.
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர்.
இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார் தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகயும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர் வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர்.இன்னும் சிலர் பக்கத்தி இருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.
அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார் அவர். கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவணமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்த்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.
இந்தியா இந்துமதம் ஆகியவைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய அந்த அரிய மாமனிதரின் கதையை தெரிந்துகொள்வோம்.
1863 ஆம் ஆண்டு சனவரி 12 ந்தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற டார்டா குடும்பத்தில் உதித்தார் நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயர்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.
தினசரி நரேந்தி நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரதக் கதைகளை சொல்வார் ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர் போகப் போக தியானத்தில் மூழ்க தொடங்கினார் சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.
மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு விவேகானந்தர் என்ற பெயரை சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி லக்னோ ஆக்ரா பிருந்தாவனம் ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது எங்கு உறங்குவது என தெரியாமல் கடுமையான துறவு வாழ்க்கையை மேர்கொண்டார்.
அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது. விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.
செப்டம்பர் 11 ந்தேதிக்கு பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதபற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும் அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார் அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.
அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார் கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயதுப் பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??
தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 இருக்கும் நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண் அப்படி காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் திரும்பினார் விவேகானந்தர்.
உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும் இந்துமதத்தின் கூறுகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் காலமானார். கண்ணியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் “விவேகானந்தர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர்.
இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப்பையும் உருவாக்கினார்.
எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும் உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் விவேகானந்தர்.
39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் அவர் ஓர் உதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் கூறியதுபோல் உடல் வலிமை, மன வலிமை, விடா முயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றை நாம் கடைபிடித்தால் நமக்கு நிச்சயம் அந்த வானம் வசப்படும்.
நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்
புகைப்படதொகுப்பு நன்றி "GOOGLE"
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ஜெமிநிவிவேக்.கே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

























