பிரபலமான இடுகைகள்

20 ஜனவரி, 2011

பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்! - சினேகாவின் ஜாலி பேட்டி

உடனிருப்பவர்களையும் உற்சாகம் கொள்ள வைக்கும் குணம் சிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர் சினேகா. அந்த முகமும் அசரடிக்கும் புன்னகையும்...

தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவை. பொங்கலுக்கு ஒரு பேட்டி என்றதும், அதுக்கென்ன தாராளமா...

என்னை பொங்கல் வைத்துக் காட்டச் சொல்லாமலிருந்தால் சரி... ஏன்னா எனக்கு பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்", என எடுத்த எடுப்பில் டாப் கியரில் போக, பொங்கலின் குதூகலம் அங்கேயே தொடங்கிவிட்டது.

பொங்கல் பத்தி ஒரு நடிகையா உங்க அனுபவம்?

பொங்கல்னா எல்லா நடிகைகளுக்குமே படம் ரிலீஸ்தான் ஸ்பெஷலா இருக்கும்.... அதுவும் எனக்கு பொங்கலன்று வெளியான படங்கள் மறக்கமுடியாதவையா அமைஞ்சிருக்கு.என் முதல் படம் விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் இப்படி நிறைய படங்கள் வெளியானது பொங்கல் தினத்தில்தான். மறக்க முடியாத படங்கள் அவை.

பொங்கல் கொண்டாடியிருக்கீங்களா...?

நானும் இந்த ஊர் பொண்ணுதானே... பொங்கல்னா எனக்கும் ரொம்ப விசேஷமான நாள்தான். பொங்கலப்போ குடும்பத்தோட இருக்கிறது ரொம்ப உற்சாகமா இருக்கும். சினிமாவுல ஆயிரம் புது காஸ்ட்யூம் போட்டாலும், பொங்கலுக்கு புதுசா ட்ரஸ் எடுக்கறது தனி பரவசம். அதை நானும் அனுபவிச்சிருக்கேன். மத்தபடி பொங்கல் நல்லா சாப்பிடுவேன். சாப்பிட்டுட்டா எடை போட்டுடுமே.. அதுக்காக வொர்க் அவுட் பண்ணனுமே என்ற கவலையுடன்!

இந்த வருஷம் பொங்கலுக்கு உங்க படம் எதுவும் வரலையா?

வருஷா வருஷம் எப்படியாவது பொங்கலுக்கு அல்லது அந்த சீஸனுக்கு ஒரு படம் வந்துடும். போன வருஷம் கூட கோவா வந்தது. பொங்கலுக்கு இல்ல... ஜனவரில. இந்த வருஷம் பவானி ஐபிஎஸ். இந்த மாச கடைசில வரும்னு நினைக்கிறேன்.

நடிக்க வந்ததிலிருந்து உங்களுக்கான இடத்தை தொடர்ந்து தக்க வச்சிக்கிட்டிருக்கீங்க... தொடர்ந்து செய்திகளின் நாயகி நீங்கதான். அந்த ரகசியம் என்ன?

எதையும் நான் திட்டமிட்டு உருவாக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் செய்திகளுக்குக் காரணம். மற்றபடி சினிமாவை முழுமையாக நேசிக்கிறேன். பணம் ஒன்றே குறிக்கோள் என்று நினைக்காமல், கண்ணியமான வேடங்கள், நிறைவான வேடங்களை மட்டுமே தொடர்ந்து செய்கிறேன்.

காதல், திருமணம் பற்றியெல்லாம்...

அடடா.. ஆரம்பிச்சிட்டீங்களா. அதெல்லாம் வரும்போது வரும்... நடக்கும் போது நடக்கும். அதுவரை என்காதல் சினிமாதான்! என்றார் சிரித்த முகத்துடன்.


 
 

Youtube வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நம் பதிவில் பகிர


உண்மையிலேயே இந்த வசதி பதிவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளது. கண்டிப்பாக பயன் படுத்தி கொள்ளுங்கள். என்ன வசதின்னு கேக்கறீங்களா தொடர்ந்து படிங்க. நாம் பதிவில் வாசகர்களுக்காக சில யூடியூப் வீடியோக்களை பகிருவோம். இந்த முறையில் நாம் வீடியோக்களை பகிரும் போது அந்த முழு வீடியோவையும் நாம் பகிர வேண்டும். அந்த வீடியோவில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றாலும் முழு வீடியோவையும் நாம் பகிர வேண்டும். ஆதலால் வாசகர்கள் அதிக நேரம் செலவழித்து அந்த வீடியோவை பார்ப்பதை தவிர்த்து விடுவதால் நாம் சொல்ல வந்த கருத்து மற்றவர்கள் இடத்தில் சரியாக போய் சேருவதில்லை.
குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர வேண்டுமென்றால் அந்த முழு வீடியோவையும் டவுன்லோட் செய்து பின்னர் சில மென்பொருள் உதவியோடு அந்த பகுதியை மட்டும் கட் செய்து பின்னர் நம் பிளாக்கில் அப்லோட் செய்து மற்றவர்களுக்கு பகிர வேண்டும். இந்த முறையில் நம்முடைய நேரம் வீணாக விரயமாகிறது. நமக்கு கிடைக்கும் குறிகிய நேரத்தில் இப்படி நேரத்தை செலவழிக்க எந்த பதிவரும் விரும்புவதில்லை ஆகையால் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது.

இந்த பிரச்சினைகளை தீர்க்கவே ஒரு அருமையான தளம் நமக்கு உதவி செய்கிறது. 



  •  முதலில் இந்த லிங்கை snipsnip.it க்ளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • மேலே உள்ள படத்தில் நான் காட்டியுள்ள இடத்தில் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவின் URL கொடுத்து உங்கள் கீபோர்டின் என்ட்டர் கீயை அழுத்தவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பது போல விண்டோ வரும்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் பகிர விரும்பும் வீடியோவின் பகுதியின் START TIME மற்றும் வீடியோவின் END TIME நிமிடம் மற்றும் நேரத்துடன் சரியாக கொடுத்து கீழே உள்ள SNIP IT என்ற பட்டனை அழுத்தவும். 
  • அடுத்து உங்கள் வீடியோ ரெடியாகி விடும் அதில் அந்த வீடியோவிற்கான EMBED URL கொடுக்கப்படும் அதை முழுவதும் காப்பி செய்து கொள்ளுங்கள். (நீங்கள் உருவாக்கிய வீடியோவின் PREVIEW பார்க்க வேண்டுமென்றால் கீழே லிங்கை க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும்)


  • இப்பொழுது உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து NEWPOST பகுதியில் EDIT HTML பகுதியில் நீங்கள் காப்பி செய்த EMBEDED கோடிங்கை பேஸ்ட் செய்து வெளியிட்டால் நம் பதிவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
    அநியாயம் ஆனால் உண்மை ! சினேகாவுடன் ஸ்டில் எடுக்க 5000 ரூபாயாம்...!  2011-01-12 23:42:15
    ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகம் தந்தல் மட்டும் சினேகவுடன் படம் எடுக்க முடியும். ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தவர்கள் நடிகை சினேகாவுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் அரங்கேறியது வேறு எங்குமல்ல...‌ போலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டும் ரோட்டரி கிளப் கருத்தரங்கம் ஒன்றில்தான்! ரோட்டரி சங்கத்தின் பாண்டிச்சேரி மாவட்ட கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.

    இதில் போலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நடிகை சினேகா கலந்து கொண்டு பேசினார். அப்போது ‌போலியோவை ஒழிக்க என்னால் ஆன உதவியை செய்வேன் என்று கூறிய சினேகா, தன் பங்குக்கு ரூ. 15 ஆயிரத்தை ‌கொடுத்தார்.

    அதன் பிறகு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலரும் போலியோ ஒழிப்பு நிதியில் தங்கள் பங்குக்கு ஐநூறு ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் வழங்கினார்கள்.

    பின்னர் ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடை வழங்கியவர்கள் மட்டும் மேடைக்கு அழைக்கப்பட்டு, சி‌னேகாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 5 ஆயிரத்திற்கு குறைவாக நன்கொடை வழங்கியவர்களுக்கு சினேகாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.
     

    ஒரே நேரத்தில் இரண்டு தளங்களின் ஓபன் ஆகும் நேரத்தை ஒப்பிட்டு பார்க்க



    நாம் இணையத்தில் ஒவ்வொரு தளங்களை ஓபன் செய்யும் போது அவைகள் அந்த தளத்தில் இருக்கும் விட்ஜெட்டுக்களின் அளவை பொருத்து ஓபன் ஆகும் ஒரு சில தளங்கள் ஓபன் ஆக மிகவும் தாமதமாகின்றன இப்படி இரண்டு தளங்களால் ஓபன் ஆக எது அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று பார்ப்போமே. நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் உங்கள் பிளாக்கோடு மற்ற பிளாக்குகளை ஒப்பிட்டு பார்க்கலாமே. 

    • இதற்கு முதலில் இந்த லிங்கில் Which Loads Faster செல்லவும். சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.  
    • இதில் அவர்களே நான்கு வகை ஒப்பிட்டு தளங்களை கொடுத்து இருப்பார்கள் தேவையென்றால் பார்க்கவும் அல்லது நீங்களே தளங்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால் கீழே உள்ள Try my own matchup என்ற பட்டனை அழுத்தவும்.
    • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உங்களுக்கு தேவையான இரண்டு தளங்களை கொடுத்து Go என்பதை க்ளிக் செய்யவும்.
    • GO அழுத்தியவுடன் இரண்டு தளங்களும் ஓபன் ஆகி எந்த தளம் ஓபன் ஆக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறது என்ற முடிவு வரும்.


    டிஸ்கி: இது எந்த அளவிற்கு சரியான நேரத்தை கணக்கிடும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது. எல்லாமே ஒரு ஜாலிக்காக தான்.
     
     

    ஆன்லைனில் யு டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய சிறந்த 20 இணைய தளங்கள்

     
    இணையத்தில் வீடியோக்கள் கொட்டி கிடக்கும் இடம் இந்த யு டியூப் இணைத்தளம். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு நமக்கு தேவையான வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி இதில் இல்லை ஆனால் சில மென்பொருட்களை நம் கணினியில் நிறுவினால் இந்த வீடியோக்களை டௌன்லோட் செய்யலாம் ஆனால் இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவுவதால் நம் கணினியில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று பயமாக உள்ளதா. அப்படி உள்ளவர்கள் ஆன்லைனிலேயே யுடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
    கீழே யுடியூப் வீடியோக்களை டவுன்லோட் சிறந்த 15 இணையதளங்களை கொடுத்து உள்ளேன். இதில் சென்று உங்களுக்கு தேவையான வீடியோவின் YOUTUBE URL கொடுத்து அருகில் கொடுத்து இருக்கும் பட்டனை அழுத்தினால் உங்கள் YOUTUBE வீடியோ உங்கள் கணினியில் சேமிக்க படும்.
    1. SAVE VEDIO DOWNLOAD
    2. CATCH VIDEO
    3. KEEPVID
    4. SAVEVID
    5. CLIP CONVERTER
    6. KEEP-TUBE
    7. DOWNLOAD YOUTUBE VIDEOS
    8. CATCH YOUTUBE
    9. YOUTUBE SNIPS
    10. TUBEZEN
    11. DOWNLOAD YOUTUBE
    12. VIDEODL
    13. DVD SOFT
    14. DOWNLOADER9
    15. ALL2CONVERT
    16. YOU CONVERT IT
    17. FLVTO
    18. FOR INSIDE
    19. DOWNLOAD-YOUTUBE
    20. KEEPHD


    Youtube ல் ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர்க்க


    இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக்கிறதோ அதற்கு இருமடங்கு கெட்ட செய்தியையும் கொடுக்கிறது. இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது இந்த youtube தளம். படிப்பிற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் இப்படி பல வகைகளில் வீடியோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள்ளன. 
    youtube ல் இந்த ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர்க்க ஒரு வசதியை youtube தளம் வழங்குகிறது.

    • முதலில் இந்த லிங்கில் www.youtube.com க்ளிக் செய்து youtube தளத்திற்கு செல்லுங்கள்.
    • இப்பொழுது உங்களுக்கு youtube தளம் வந்து இருக்கும். அதில் நீங்கள் கீழ் பகுதிக்கு செல்லுங்கள்.
    • அங்கு Safety mode : Off என்று லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.


    • இந்த லிங்கை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
    • இதில் நீங்கள் On என்பதை க்ளிக் செய்து Save கொடுத்து விடுங்கள்.




    • அவ்வளவு தான் youtube ல் ஆபாச வீடியோக்கள் முற்றிலுமாக தவிர்க்க பட்டுவிட்டது.
    • இதை உறுதி செய்ய நீங்கள் ஏதேனும் கொடுத்து தேடி பாருங்கள் No videos found என்ற செய்தியே வரும்.



    • இனி எந்த பயமும் இன்றி நாமும் பிள்ளைகளும் வீடியோக்களை ரசித்து மகிழலாம்.

    PDF பைலை பூட்ட,திறக்க,ஒட்ட,வெட்ட சிறந்த மென்பொருள்


    நாம் நம்முடைய விவரங்களையோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய செய்திகளையோ PDF பைலாக மாற்றி வைத்திருப்போம். சாதரணமாக நாம் உருவாக்கும் PDF பைல்களை அனைவரும் Print எடுக்கும் வகையிலும் காப்பி செய்யும் வகையிலும் உருவாக்குகிறோம். அதனால் நம் பைல்கள் மாற்ற படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை எப்படி யாரும் திறக்காதவண்ணம் நாம் பூட்டு போடுவது என்று இங்கு காணலாம்.

    உபயோகிக்கும் முறை: 
    • கீழே உள்ள Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொண்டு உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். 
    • இந்த மென்பொருள் வெறும் 5MB அளவே கொண்டது.
    • இந்த மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். continue Trial என்பதை க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

    • இதில் முதலில் Add என்பதை க்ளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொண்டு Lock என்ற பட்டனை அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.இதில் உங்கள் பைலுக்கு Password தேர்வு செய்து கொள்ளுங்கள்.
    • உங்களுக்கு தேவையான Password கொடுத்து உங்கள் pdf பைலை பாதுகாப்பானதாக மாற்றி கொள்ளுங்கள். 
    • அடுத்து உங்கள் pdf பைலில் நிறைய பக்கங்கள் இருக்கலாம் ஒரு ஒரு பக்கத்தையும் தனித்தனியாக பிரிக்க இதில் உள்ள Split என்ற வசதி பயன்படுகிறது.
    • அதற்கு முதலில் உங்கள் pdf பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அடுத்து Split என்று இருக்கும் பட்டனை ஒரு க்ளிக் செய்தாலே போதும் உங்கள் பைலின் பக்கங்கள் தனி தனி பைல்களாக மாறிவிடும்.
    • அடுத்த வசதி Merge வசதி இந்த வசதி வெவ்வேறான PDF பைல்களை ஒன்றாக ஆக்க பயன்படுகிறது. இவைகள் அனைத்தும் சுலபமான வேலை என்பதால் அதிக விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கிறேன். 
    • சரி இந்த முறையில் நீங்கள் பூட்டு போட்ட pdf பைல் பாதுகாப்பானதா என அறிய வேண்டுமா உங்கள் PDF பைலை திறந்து கொண்டு கீழே உள்ள முறையில் சென்று பாருங்கள் அனைத்தும் தடை செய்ய பட்டிருக்கும்.
    • இந்த பைலை UNLOCK செய்ய பைலை தேர்வு செய்து கொண்டு உங்கள் password கொடுத்தால் திறந்து விடும்.


    இது நல்ல மென்பொருள். இதில் உள்ள பிரச்சினை என்றால் இது trail version 30 நாட்கள் வேலை செய்யும்.



     
     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    ,