விண்டோசில் விரும்பிய எழுத்துக்களை கொண்டுவர
கணிணியில் உள்ள எழுத்துக்களை நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ற படி மாற்றிக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.இது டெக்ஸ்டாப்பின் வெற்றிடத்தில் ரைட்கிளிக் செய்தால் வரும் விண்டோ:-(இதன் எழுத்துக்களை பாருங்கள்)
இதே விண்டோவில் நாம் விரும்பிய எழுத்துக்களை வேண்டிய நிறங்களை கொண்டுவந்தபின் வந்த விண்டோவினை பாருங்கள்:-
சரி..இந்த எழுத்துக்களை எப்படி நமது கம்யூட்டரில் கொண்டுவருவது...இதற்கு சாப்ட்வேர் எல்லாம் தேவையில்லைங்க..ஒரு சின்ன மாற்றம் செய்தால் போதும்.முன்பு சொன்னது மாதிரி டெக்ஸ்டாப்பின் காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு மேலே உள்ள விண்டோ ஒப்பன் ஆகும். அதில் Properties கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நான்காவதாக உள்ள Appearance டேபை கிளிக் செய்து அதில் உள்ள Advanced கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Item என்கின்ற விண்டோவில் உங்கள் கணிணியில் உள்ள அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் தேவையானதை தேர்வு செய்து( நான் மெனு என்பதனை தேர்வு செய்துள்ளேன்)அதன் எழுத்துரு - வண்ணம் - அளவு -தேர்வு செய்து ஓ,கே.தரவும் . .
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த ஐட்டத்தின் எழுத்துக்களும்
வண்ணங்களும் அளவுகளும் மாறி உள்ளதை காணலாம்.
புகைப்படங்களை டிஜிட்டல்
ஆர்ட் ஆக மாற்ற
ஆன்லைன் தளம
சாதாரண புகைப்படங்களை அழகிய டிஜிட்டல் ஆர்ட் (Digital Art) ஆக மாற்றுவதற்கு உதவும் தளமாக Befunky உள்ளது. விண்டோஸ் பெயிண்ட் பிரஷில் இல்லாத பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. புகைப்படத்தை கார்ட்டூன் போலவோ, கரியால் வரைந்த ஓவியம் போலவோ, மற்றும் பல புதிய வடிவமாக மாற்றவோ Befunky பயன்படுத்தலாம்.
நம் கணினியில் உள்ள புகைப்படத்தை அங்கே தரவேற்றவேண்டும் (Upload). சமூகக் குழும தளங்களில் (Social Networking sites) இருந்து நேரடியாக தரவேற்றும் வசதியும் உண்டு. டிஜிட்டல் ஆர்ட் ஆக மாற்றப்பட்ட நமது திறமையால் உருவான அழகிய நவீனத்தை பேஸ்புக், மைஸ்பேஸ் போன்றவற்றில் பகிரும் வசதியும் உண்டு.
விண்டோஸ், லினக்ஸ், மேக் ஆகிய அனைத்து இயங்குதளத்திலும் (Operating System) இதைப் பயன்படுத்தலாம். உங்கள் உலவியில் (Browser) இருந்து இயக்குவதால் இது சாத்தியமாகிறது. சமீபத்திய பிளாஷ் ப்ளேயர் (Flash Player) தேவைப்பட்டால் தரவிறக்கிக் (Download) கொள்ளவும்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
,